மூன்றாம் உலகபோர் கொரோனா – 19

ஞாயிறு ஏப்ரல் 05, 2020

முதல் உலகபோர் இரண்டாம் உலகபோர் பற்றி நாம் அறிந்ததே ஆனால் இப்போது நடப்பதோ கண்களுக்கு தெரியாத மூன்றாம் உலகபோர் . முதல் மற்றும் இரண்டம் உலகபோர் மனிதன் உருவாக்கியது.

அதாவது இரு நாட்டிற்கும் இடையே இராணுவ படைகளை கொண்டு நடத்தப்படும் இதில் முடிவு இரு நாட்டினரும் எடுக்கும் முடிவே முடிவாகும். பொருளாதார இழப்பு , உயிர்யிழப்பு .ஆனால் கண்களுக்கு தெரியாத வைரஸ் ( covid – 19 ) உலகமே இணைந்தால் கூட நிறுத்த முடியவில்லை (தற்போது ). இந்த வைரஸ் கொரோனா (covid – 19 ) என்று பெயர் பெற்றுள்ளது .

இந்த வகை வைரஸ் ஆனது முதலில் விலங்கினத்திற்கு சிறிய வகை வகையில் பாதிப்பை உண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது அந்த காலங்களில் .


பழைய வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது . மனிதனை தாக்கும் அளவுக்கு உருவெடுத்து போர் நடத்த ஆரம்பித்து தான் செயல்பாடுகளை மிக மிக கொடிய வகையில் விளைவுகளை ஏற்படுத்தி கொண்டியிருக்கும் இந்த வைரஸ் covid-19 பெயர் பெறுவதற்கு கரணம்.

இந்த வைரஸின் உருவத்தோற்றமானது ஒளிவட்டம் போலவும் / ராஜாவின் தலையில் கிரீடம் போலவும் இருப்பதின் காரணத்தினால் இலத்தின் மொழியில் கிரீடம் என்பது கொரோனா என்று பொருள்படும் ஆகையாலும்


31 /Dec /19 அன்று மனிதனுக்கு இருப்பதை கண்டறியப்பட்டதாலும் இதற்கு covid – 19 கொரோனா என்று பெயர்.

அண்டைய நாடான சீனாவில் உள்ள ஊகான் மாகாணத்தில் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த மருத்துவரையும் விட்டு வைக்கவில்லை . இந்த தொற்று வைரஸ் வகையை சார்ந்தது .
ஆட்களை ஆட்கொள்ளுலும் வைரஸ் . ஊகான் மாகாணத்தில் உள்ள ஏறத்தாழ அனைவரையும் விடாமல் தொற்றிக்கொண்டது .கொரோனா வந்த நோயாளிகள் எந்த பொருளை தொட்டாலும், இருப்பினாலும் மற்றவருக்கு வரும் அபாயம் .


இத்தகைய வைரஸ் தொற்றானது சீனாவில் மட்டுமில்லாமல் அனைத்து உலக நாடுகளிலும் விசா இல்லாமலும் விலாசித்தள்ளியது. தன் கொடிய வைரஸை மக்களுக்கு. இதை தடுக்க முடியாமலும் வளர்த்த நாடுகளும் ( வல்லரசு ) ,வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளும் தன் மக்களை காப்பாற்ற தடுமாறி தடுமாறி நாட்களை கடந்து சென்று கொண்டே உள்ளது. இந்த வைரஸ் இரும்பல் , காய்ச்சல் , உடல் சோர்வு, வாந்தி , தலைவலி தொடந்து இருக்கும் பச்சத்தில் அவர்களுடைய இரத்த மாதிரியை கொண்டு அடையாளம் காண பதிண்ணைந்து தினங்கள் ஆகும் .

மனித உடம்பில் உள்ள உறுப்புகள் நுரையீரல் , மூச்சு குழாய் பாதிப்பு அடைந்துவிடும் அளவுக்கு மிககொடிய நோய் கொரோனா வைரஸ் . நோய் தடுக்கும் வண்ணமாக உலக நாடுகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கபட்டும்.


நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தடையின் சில நன்மைகள் ;

 • அனைவருக்கும் விடுமுறை
 •  
 • மதுபான கடைகள் மூடப்பட்டது
 •  
 • பேருந்து நிலையத்திலும் மற்ற பொது கழிப்பறையும் சுத்தம் காக்கப்பட்டது
 •  
 • டிவி சீரியல்கள் இல்லாமலும் இல்லறது அரசிகளால் வாழ முடிந்தது
 •  
 • நெடுஞ்சாலைகளும் , சாலைகளும் மற்றும் வீதிகளும் அரசின் மூலம் தூய்மை செய்யப்பட்டது
 •  
 • அரசு மருத்துவமனைகள் அனைத்தும் சிறப்புடனும் , பொறுப்புடனும் செயல்பட்டது
 •  

இவை அனைத்தும் செய்யப்பட்ட வேண்டும் என ஆசைப்பட்ட சமூக ஆர்வலர் , சில மனிதர்களுக்கும் இந்த கொரோனா எதிர்பார்ப்பை நிறைவு செய்தது இந்த அரங்கத்தின் மூலம் .

உலக நாடுகளிலும்

 • மருத்துவர்கள் , செவிலியர்கள் , மருத்துவ பணியாளர்கள்
 • .
 • தூய்மை பணியை செய்பவர்கள்
 •  
 • காவல்துறையினர்

 • அனைவரும் தங்கள் உயிரை வைத்து நம் உயிரை காப்பாற்றவும் , கொரோனாவை தடுக்கவும் துடிக்கும்
  நிஜ ஹீரோக்கள் …..

கொரோனா வைரசுக்கு முடிவு கொண்டு வர முடிவை தேடும் உலக நாடுகள். இதில் கொரோனா எந்த மதம் என்று தேடுகிறது சில கட்சிகள்.


வைரஸை விட்டு விலகி இருப்போம் ,


தூய்மை காப்போம் ,


நாம் பாரம்பரிய பழக்க வழக்கங்களை கடைபிடிப்போம் ,


மூன்றாம் உலகப்போரை முடிக்கு கொண்டு வர ஒத்துழைப்பு கொடுப்போம்,


உலக நாட்டையும் ,நம் நாட்டையும் காக்க வழி வகுப்போம்.

 • உடலால் பிரிந்து இருப்போம்
 •  
 • மனதால் இணைந்து இருப்போம்
 •  
 • மனித குலத்தினை காப்போம்

 • முடிவை தேடும் முடிவில்லா முடிவுரை covid – 19 .

ஷாபி அக்தர்