நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு – வர்த்தமானி அச்சகத்துக்கு

செவ்வாய் டிசம்பர் 03, 2019

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான வர்த்தமானி அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி இன்று நள்ளிரவுக்கு முன்னர் வௌியிடப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி நியூஸ்பெர்ஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி சற்று நேரத்துக்கு முன்னர் தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் பாராளுமன்றத்தில் செயற்பட்டு வந்த அனைத்து தெரிவுக்குழுக்களும் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.