நீர் நிரம்பிய குழிக்குள் தவறி வீழ்ந்த 2 சிறுவர்கள் பலி!!

திங்கள் மே 18, 2020

பகமூண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தலே யாய,கிரி ஒய, அதரகல்லெவ பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள இச்சிறுவர்கள் இருவரும் தமது வீட்டின் பின்புறத்திலுள்ள நீர் நிரம்பிய குழிக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.அதேயிடத்தைச் சேர்ந்த 03,07 வயதுகளையுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் பகமூண பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.