நீர்கொழும்பு சிறையில் போதைப்பொருள் உட்பட தொலைப்பேசிகள் மீட்பு!

வெள்ளி பெப்ரவரி 14, 2020

10 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியன நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 10 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் 27 பேர் வியாழக்கிழமை இரவு இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் இவ்வாறான சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.