நினைவேந்தல் நடத்தினால் சுடுவோம்

ஞாயிறு மே 17, 2020

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் உள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விஜயழகன் ரஜீதாவின் வீட்டிற்க்கு இன்று (17) காலை 10.40 மணியளவில் 10ற்கும் மேற்பட்ட பொலிஸார் சிலர் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பொலிஸார் நாளை (18) வடமராட்சி கிழக்கில் உங்கள் கட்சியின் ஏற்பாட்டில், உங்களது தலைமையில் பொது இடம் ஒன்றில் விளக்கேற்றவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளளதாகவும் அப்படி செய்யயக்கூடாது என்றும் செய்தால் இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்யும் என்றும் அதன் பின் தங்களிடம் வர வேண்டாம் என்றும் சொல்லி சென்றுள்ளார்கள்.