நோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி!

திங்கள் மார்ச் 30, 2020

தாயகத்தில் கல்லூரி வீதி காங்கேசன் துறையைப் பிறப்பிடமாகவும் நோர்வேயில் லம்பசத்தர் எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 67 அகவையுடைய வேலுப்பிள்ளை சிவபாலன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று நண்பகல் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார்.

ஏற்கனவே அவர் இதயநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் சுவாசப்பை தொற்று ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூடவே கொரோனா தொற்றும் ஏற்பட்டு நேற்று இத்துயரச்சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.