நவாலியில் திருடர்கள் சிக்கினர்!

ஞாயிறு மே 17, 2020

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளம் குடும்ப பெண்ணின் தாலிக் கொடியை அறுத்த திருடர்கள சில மணிநேரங்களில்  சிறிலங்கா காவல் துறையால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்களின் முச்சக்கர வண்டியின் இலக்கத்தை வைத்து கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக் கொடியும் காவல் துறையால் கைப்பற்றப்பட்டது.

இந்த தாலி அறுப்பு சம்பவம் நேற்று (16) மாலை 3 மணியளவில் இடம்பெற்ற நிலையில் திருடர்கள் வந்த முச்சக்கர வண்டி குறித்து பெண் வழங்கிய தகவலின்படி அதன் உரிமையாளரைக் கைது செய்தனர்.

அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாலிக் கொடியை அறுத்தவரை இரவு11 மணியளவில் காவல் துறையினர்  கைது செய்தனர்.