ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கைது கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில்!

வியாழன் ஜூலை 11, 2019

யாழ். மாதகல் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக,சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்தோடு,இச்சந்தேகநபர்களிடமிருந்து 64 கிராம் கேரள கஞ்சாவையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.குறித்த பகுதியில் இளவாலை பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் நடத்திய சோதனையின்போது, இச்சந்தேகநபர்கள் நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் 03 மகன்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 50, 27, 26, 22 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இச்சந்தேகநபர்களிடம் இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.