ஒருபோதும் கட்சி என்ற ரீதியில் வெற்றிப் பெற முடியாது!

புதன் ஓகஸ்ட் 14, 2019

காலையில் எதிரணியினரை பழித்து விட்டு இரவில் அவர்களை சந்தித்து நட்புறவாடினால் ஒருபோதும்  கட்சி என்ற ரீதியில் வெற்றிப் பெற முடியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

றாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

ஐக்கிய தேசிய கட்சிக்குள்   தற்போது  கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றது என்பதை பகிரங்கமாகவே ஏற்றுக் கொள்ள  வேண்டும். காணப்படுகின்ற முரண்பாடுகளுக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் கட்சி உறுப்பினர்கள் பிளவுப்படுவார்கள். அது ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும்.

காலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை பழித்து விட்டு  இரவில் அவரை சந்தித்து நட்புறவாடுவதால் கட்சியினை ஒருபோதும்  பலப்படுத்த முடியாது. அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தருணம் இது என்றும் கூறினார்.