ஓட்டமாவடியில் வர்த்த நிலையங்களை உடைத்து திருட்டு!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

மட்டக்களப்பு – வாழைச்சேனை காவல் துறை  பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு வேளையில் ஓட்டமாவடி தபால் நிலைய வீதியிலுள்ள சில்லறை வியாபார நிலையம், ஓயில் வியாபார நிலையம் என்பவற்றினை உடைத்து சில்லறை பொருட்கள் மற்றும் ஓயில் வகைகள், பணம் என்பவற்றுடன் வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவினை உடைத்து அதன் உதிரிப்பாகங்களையும் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று ஊரடங்குச் சட்டம் இரண்டு மணியளவில் அமுல்ப்படுத்தப்பட்ட போது வியாபாராத்தினை முடித்து விட்டு உரிமையாளர்கள் வீடு சென்றதாகவும், இன்று காலை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வகையில் வியாபாரம் செய்வதற்கு வியாபார நிலையத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட போது வியாபார நிலையம் உடைக்கட்டிருந்ததையடுத்து காவல் துறைக்கு  தெரிவித்தனர்.

இவ்வியடம் தொடர்பில் வாழைச்சேனை காவல் துறை  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார். (150)