பிரான்சில் லாரியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகள் சிக்கினர்!

திங்கள் நவம்பர் 04, 2019

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸெக்ஸ் நகரில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து வியட்நாமை சேர்ந்த 39 பேர் உடல்கள் மீட்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் அகதிகள் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் காவல் துறை  தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் பதுங்கி இருப்பதை கண்டனர். லாரியின் சாரதி  கைது செய்யப்பட்டார். அகதிகள் அனைவரும் இத்தாலி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.