பிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்!

புதன் ஜூலை 17, 2019

பிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி  கந்தையா ஆறுமுகம் அவர்கள் நேற்று 16/07/19 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார். 
கந்தையா ஆறுமுகம் அவர்கள் 2008 ஆம் ஆண்டு பொண்டி தமிழ்ச் சோலையில் ஆசிரியராகத் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து தமிழ்ச்சோலை நிர்வாகியாக இருந்து பல செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.

அன்னாரின் இழப்பினால் இவரது குடும்பத்தினர், பொண்டி தமிழ்ச்சங்கம், பொண்டி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த துயரடைந்துள்ளனர்.
இவரது இறுதிவணக்க நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பொண்டி தமிழ்ச்சங்கம் தெரிவித்துள்ளது.