பிரான்சு பொண்டியில் கொரோனா தொற்றில் அச்சுவேலி 58 வயது நபர் பலி!

புதன் ஏப்ரல் 01, 2020

ஈழத்தில் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட 58 வயதுடைய நாகமுத்து உதயபாஸ்கரன் கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (31-03-2020) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் உபாதைகள் இருந்தபோதும், நேற்று திடீரென மூச்செடுப்பதற்கு சிரமப்பட்ட போது அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.