பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கு பிணை!

செவ்வாய் சனவரி 14, 2020

பகிடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (14) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த மாணவர்கள் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கையில் இனிமேல் ஈடுபடகூடாது என்று எச்சரித்த நீதவான், விசாரணை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என, மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் கடந்த​ 9ஆம் திகதி மாலை பகிடிவதையை அடிப்படையாகக் கொண்டு மோதல் இடம்பெற்றிருந்தது.

கறுவாத்தோட்டம்  காவல் துறை  நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடந்த 10ஆம் திகதி காவல் துறை  நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.