‘போலித்தகவல்களைப் பரப்பாதீர்’

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

எந்தவொரு உறுதிப்படுத்தப்படாத போலியானத் தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால்,  பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை, பொலிஸ் ஊடகம் மறுத்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ள அந்த ஆணைக்குழு, இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க  வேண்டாம் எனக் கோரியுள்ளது.