பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சோதனை சாவடிகளில் மறிக்கப்பட்டு சோதனை!!

சனி மே 23, 2020

நாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் விசேட கடமை நேரத்தின் அடிப்படையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் விசேட ரோந்து நடவடிக்கைகளும் இருக்கும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.அதன்படி எதிர்வரும் 2 நாட்களில் வீதிகளில் நடமாடும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சோதனை சாவடிகளில் மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.