பொதுவான நீதி கட்டமைப்பை உருவாக்க வேண்டும்!

புதன் ஓகஸ்ட் 14, 2019

இந்து சமூத்திரத்தின் போட்டி மிகு பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பண்டாரநாயக்க உள்ளக தேசிய இராஜதந்திரிகள் பயிற்சி நிறுவனத்தில் நேற்று (13) நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ´இந்து சமூத்திரத்தின் போட்டி மிகு பொருளாதார மத்திய நிலையமாக மாறுவதே எமது பிரதான நோக்கம். அதற்கு உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்து சமூத்திரத்தின் பிரதான துறைமுகமாக மாற்ற நாம் நடவடிக்கை எடுப்போம். அதற்கமைய அந்த துறைமுகத்தை சுற்றி கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மேலும் சமூத்திர பொருளாதாரத்தை பலப்படுத்துவதுடன், இலங்கையை இந்து சமூத்திரத்தின் வர்த்தக கேந்திர நாடாக மாற்ற இந்த வலயத்தை சக்திமயபடுத்த வேண்டும். 

அதன்படி இந்து சமூத்திர வலயத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொதுவான மத்திய நிலையமாகவும், அனைவருக்கும் பொதுவான நீதி கட்டமைப்பை உருவாக்கம் முக்கியமானதாகும்´ எனவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.