புலம்பெயர் தேசியக் கட்டமைப்புக்களை உடைக்க முற்படுவோருக்கு சாட்டையடி கொடுக்கும் குறும்படம் - வெளியிட்ட முன்னாள் போராளிகள்!

வெள்ளி சனவரி 17, 2020

புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை முன்னாள் போராளிகள் என்ற போர்வையில் உடைக்க முற்படுவோருக்கு சாட்டையடி கொடுக்கும் குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இக் குறும்படத்தில் சுடரொளி, உயற்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இவர்களில் சுடரொளி என்பவர் கடற்புலிகளின் கப்பல் ஒன்றின் தலைமைக் கட்டளை அதிகாரியாக (கடல் கப்டன்) பணிபுரிந்தவர். 1998ஆம் ஆண்டின் இறுதியில் சிறுநீரங்கள் செயற்பட மறுத்த நிலையில் மரணத்தின் விளிம்பில் நின்ற தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை வன்னியில் இருந்து ஏற்றிக் கொண்டு தென்கிழக்காசிய நாடொன்றுக்குப் பத்திரமாக அழைத்துச் சென்ற நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியவர். 2003ஆம் ஆண்டு தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் 2007ஆம் ஆண்டு கொழும்புக்கு நாடுகடத்தப்பட்ட இவர் அங்கு பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

 

அடுத்த நடிகரான உயற்சி கடற்புலிகளின் கள மருத்துவராகப் பணிபுரிந்தவர். இறுதி யுத்தத்தில் பல போராளிகள் - பொதுமக்களின் உயிர்களைக் காத்த இவர், முள்ளிவாய்க்காலில் இயங்கிய இறுதி மருத்துவமனைக்குப் பொறுப்பாகவும் இருந்தவர். யுத்தத்தின் முடிவில் எதிரியால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட இவரும் பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

 

இருவரும் தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.

 

 

 

Sudaroli - Uyartchi