ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்-வவுனியா

புதன் ஓகஸ்ட் 14, 2019

வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு இன்று (புதன்கிழமை) விஜயத்தை மேற்கொண்ட பிரதமர், வவுனியா வைத்தியசாலையில் கட்டடம் ஒன்றை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏ-9 வீதியூடாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்டபோதும் பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

11

இன்று 907 ஆவது நாளாகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமக்கான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் பிரதமரின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.