ரணிலுக்கு இன்று விசாரணை!!

திங்கள் செப்டம்பர் 16, 2019

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (16) முன்னிலையாகவுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சை பராமரித்துச் செல்வதற்காக ராஜகிரியில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றை பெற்றுக் கொண்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றிற்கு அமைய பிரதமருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முற்பகல் 9.30 மணி அளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் சாட்சியம் வழங்கவுள்ளார்.