ரஷியாவில் அணு ஏவுகணை பரிசோதனையின்போது விபத்து!

சனி ஓகஸ்ட் 10, 2019

ரஷியா நாட்டுக்கு உட்பட்ட ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணையை பரிசோதித்தபோது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அணு ஆயுத பலத்தில் உலகின் முன்னணி நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரஷியா, அவ்வப்போது 

வான்வழியாகவும், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது.
 

அவ்வகையில், அந்நாட்டின் வடமேற்கில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியை ஒட்டியுள்ள வெள்ளை கடலின் அருகாமையில் நியோனோக்ஸா பரிசோதனை மையத்தில் நேற்று முன்தினம்  (வியாழக்கிழமை) அதிநவீன ஏவுகணையை ரஷியா பரிசோதிக்க முயற்சித்தது.

 

நீர்மூழ்கி ஏவுகணை


ஏவுகணையை தரையில் இருந்து விண்ணை நோக்கி உயர்த்தும் என்ஜினை பரிசோதித்தபோது அது சோதனைக்கு இடையில்வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ரஷியா அணு ஆராய்ச்சி துறை மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாகவும் 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தினால் சோதனை நடைபெற்ற பகுதிக்கு சுமார் 100 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கு கதிர் வீச்சு அதிகமாக இருந்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன