தாத்தா, பாட்டியை கட்டியணைக்க சிறுமி செய்த செயல்

சனி மே 16, 2020

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டியை கட்டியணைக்க நினைத்த சிறுமி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்தவகையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியான லிண்ட்சே என்பவரின் பாட்டியும், தாத்தாவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாத்தா, பாட்டியை கட்டியணைக்க நினைத்த சிறுமி புதிய உத்தி ஒன்றை கண்டுபிடித்தார். பாலீத்தீன் பைகளால் ஆன பெரிய திரையை உருவாக்கிய சிறுமி, அதில் கட்டித் தழுவும் விதமாக கைகளை நுழைத்துக்கொள்ளும் பையையும் பசையால் ஒட்டினார். அதன்பின்னர் தாத்தா, பாட்டியை தன் விருப்பம் போல் கட்டியணைத்தார்.

 

தாத்தா, பாட்டியை கட்டியணைக்கும் சிறுமி


சிறுமி லிண்ட்சேவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.