தென்மராட்சி பிரதேச தலைமைக் காரியாலயத்தில் அஞ்சலி!!

திங்கள் மே 18, 2020

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்மராட்சி பிரதேச தலைமைக் காரியாலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

சாவகச்சேரியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் முன்னெடுத்தனர்.