தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் நாளைவரை ஒத்திவைப்பு

திங்கள் மே 18, 2020

பொது தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரீசிலிக்கும் நடவடிக்கை நாளை காலை 10 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலையும் நாடாளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி அறிவித்தலையும் வலுவிலக்க செய்யுமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு இன்று (18) எடுத்துக்கொள்ளப்பட்டது.