திருப்பதி மலையில் தற்கொலை!

ஞாயிறு டிசம்பர் 15, 2019

 இந்திய நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, ஆளுநர்கள்  முதல் , ஏன் இந்தியாவில் ராக்கெட் விட்டாலும், இஸ்ரோ தலைவர்கள் பிராத்தானை செய்யக்கூடிய இடமாக திருப்பதி கோயில் திகழ்கிறது, 

இந்த திருப்பதி கோவில் மலையில் தான் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோக சம்பவம் அரங்கேறி உள்ளது,வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு, ஒரு 40 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார் என திருப்பதி காவல்துறைக்கு தகவல் வந்தது, 

மேற்கொண்டு காவல்துறை விசாரணையில் அந்த நபர் தமிழ்நாட்டை சேர்த்தவர் என்றும், இது ஒரு விபத்து என்றும் முதலில் உறுதிசெய்த காவல்துறை, பின்பு தீவிர விசாரணையில் இறந்த நபர் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

திருமலை தேவஸ்தான அதிகாரி 

AV ரமணா திகஷ்த்தல்லு கூறுகையில், இந்த தற்கொலை சம்பவம் இது தான் முதல் தடவை என்றும், திருமலையில் இறந்தால் மோட்சத்திற்கு போகலாம் என்ற ஒரு கருத்து பக்தர்களிடையே நம்பபடுகிறது என்றும், அந்த வகையில் தான் இந்த தற்கொலை நடந்துள்ளது என கூறியுள்ளார். 

மேலும் இந்த சம்பவத்தால் ஆகம வீதியின் படி சிறப்பு பூஜை நடைபெறும் என கூறினார். காவல்துறை இறந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி, இறந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என தீவிர விசாரனையில் இறங்கியுள்ளனர்..

உலகம் இன்று அறிவியல் சார்ந்து இயங்கி கொண்டிருக்க வேளையில், பகுத்தறிவற்ற செயலால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார், மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் தடுக்க பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்தாக இருக்கிறது..