திடீர் தீ; வாகனங்கள் பல எரிந்தது!

புதன் செப்டம்பர் 11, 2019

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்த்துடன் அருகில் நின்ற ஹையேஸ், முச்சக்கர வண்டி மற்றும் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளன.

இந்த அனர்த்தம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பேருந்து, ஹையேஸ், முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்தன.

இந்நிலையில் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளன. மின் ஒழுக்கே காரணம் எனச் சந்தேகம்.