தலைமைச் செயலகம் என்ற சிங்கள ஒட்டுக்குழு இரண்டாக உடைந்தது – திடுக்கிடும் ஒலிப்பதிவுகள் சிக்கின!

செவ்வாய் ஜூன் 25, 2019

தலைமைச் செயலகம் என்ற பெயரில் புலம்பெயர் தேசங்களில் இயங்கி வரும் காகிதப்புலி சிங்கள ஒட்டுக்குழு இரு கூறுகளாக உடைந்துள்ளது.

 

இக் கும்பலின் பொம்மைத் தலைவராக இயங்கி வந்த சுரேஸ் என்றழைக்கப்படும் அமுதன் அவர்கள் அக் கும்பலை விட்டு வெளியேறியிருப்பதோடு, அக்கும்பலுக்கும்,சிங்களப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் நிலவும் இரகசிய தொடர்புகள் பற்றித் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களிடம் போட்டுடைத்துள்ளார்.

 

இதனையடுத்து இவ் ஒட்டுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய ஒலிப்பதிவுகள் சங்கதி-24 இணையத்தளத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

 

இவற்றில் ஒரு திடுக்கிடும் ஒலிப்பதிவு இன்று ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12:00 மணிக்குப் பின் சங்கதி-24 இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.