தளபதி மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள்!

சனி சனவரி 11, 2020

தமிழீழ ‘இதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சூகையீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் 11.01.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின் போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இன்பநிலா அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் 11.01.2000 அன்று“ஓயாத அலைகள்–03“நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் மதிவதனன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் 11.01.2000 அன்று “ஓயாத அலைகள்– 03“நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை புலிவேந்தன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.