தமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி

வியாழன் ஜூலை 18, 2019

யேர்மனி பேர்லினில் தமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 ல் தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர்  தர்மலிங்கம் சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு தாயகத்தில் எமது உறவுகள் படும் அவலத்தை எடுத்துரைத்ததோடு மட்டும் அல்ல தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தும் பணியில் புலம்பெயர் மக்களின் பங்கின் முக்கியத்துவத்தை கோடிட்டு தனது உரையை நிகழ்தினார். 

இறுதியில் பேர்லின் அம்மா உணவகம் தாயக மக்களுக்கு ஆற்றும் வாழ்வாதார பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசியதோடு நிலமும் புலமும் தொடர்ச்சியாக இணைந்து பயணிக்க வேண்டியதன் தேவையையும் தெளிவுபடுத்தினார். 

5

கலைமாருதம் நிகழ்வில் தமிழ் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் 1000 € தாயக மக்களின் நல்வாழ்வுக்காக வழங்கப்பட்டது. ஆசிரியர் தர்மலிங்கம் சுரேஷ் அவர்கள் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் பேர்லின் நகரில் சர்வதேச ரீதியாக செயற்படும் முக்கிய மனிதவுரிமை அமைப்புடனும் சந்திப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.