தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது 07.09.19 அன்று!!

செவ்வாய் செப்டம்பர் 03, 2019

தமிழ்முரசம் வானொலியின் 22 வது ஆண்டு நிறைவின் பொன்மாலைப்பொழுது வரும் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் நடனங்கள் நகைச்சுவை நாடகம் இசைக்கோர்வை தாயகப்பாடல்கள் மற்றும் இரண்டு சுற்றுக்களை கடந்து இறுதிச்சுற்றில் 15 போட்டியாளர்கள்  போட்டியிடும் இளம் செல்லக்குயில் / செல்லக்குயில் / வானம்பாடிகளின் அற்புதமான பாடல்த்தொகுப்புக்களென உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கலைப்படையலோடு பொன்மாலைப்பொழுதில் உங்கள் மனங்களோடு பேசவருகின்றார்கள் தமிழ்முரசத்தின் பணியாளர்கள்.

1

4

7

8

9

இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்கு நீங்கள் வழங்கும் அன்பளிப்பு வெறும்100 குரோனர்கள் மட்டுமே!, இன்றே இப்பொழுதே நெய்தல்கடையிலும் fashion of india புடவைக்கடையிலும் பொன்மாலைப்பொழுதிற்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்!
எங்கள் மண்ணை
விடிவுறச்செய்வோம்!