தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது!

புதன் மே 15, 2019

சட்ட விரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு எடுத்துச் வர முயற்சித்த நோர்வே பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  சுங்கஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நோர்வேயைச் சேர்ந்த 55 வயதான நகை கடை வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே தந்தையும் மகனும்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபரிடம் இருந்து 1 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான 1 கிலோ 825 கிராம் எடையுடைய தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இருவருக்கும் 6 இலட்சம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்