தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 13 பேர் பலி!

வியாழன் டிசம்பர் 12, 2019

வங்காளதேசத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வங்காளதேசம் நாட்டின் தலைநகரம் டாக்காவின் அருகேயுள்ள கெரனியாகஞ்ச் என்ற பகுதியில் அனுமதியின்றி பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திலும் இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம்.