துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

ஞாயிறு மே 17, 2020

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் இன்று (17) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த ஹாமிகே இஷார டில்ஷான் (23-வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் துப்பாக்கியை பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாக சிறிலங்கா  காவல் துறைக்கு  கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.