உலகெங்கிலும் முடங்கிய சமூக வலைத்தளங்கள்!

வியாழன் ஜூலை 04, 2019

உலககெங்கிலும் சமூக வலைத்தளங்களான வட்சப், இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக் பாவனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களிலிருந்து படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு தரவிக்கம் செய்தல் என்பன முற்றாக செயலிழந்துள்ளன.

இலங்கையிலுள்ள சமூக வலைத்தள பாவனையாளர்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்பட்டுள்ள கோளாறு விரைவில் சீர் செய்யப்படும் என சமூக வலைத்தள நிறுவனங்கள் அறிவித்துள்ளன.