ஊர்ச்சங்கங்களின் விடிவெள்ளியாகத் திகழும் வேலணை விடிவெள்ளி அமைப்பு!

புதன் ஜூன் 12, 2019

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து வரும் ஊர்ச் சங்கங்களின் விடிவெள்ளியாக வேலணை பிரதேசத்தில் இயங்கி வரும் விடிவெள்ளி அமைப்பு காணப்படுகின்றது.

 

Tuition4

 

நீண்ட காலமாக வேலணை பிரதேசத்தில் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வரும் இவ் அமைப்பு, கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நான்கு இலவச புலமைப்பரிசில் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது.

 

Tuition1

 

கடந்த 19.05.2019, 26.05.2019, 02.06.2019, 09.06.2019 ஆகிய நாட்களில் நடைபெற்ற இக் கருத்தரங்குகளால் வறிய மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் நிதிநெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பயனடைந்தனர்.

 

Tuition2

 

இதற்கு முன்னர் கடந்த 17.02.2019, 27.03.2019, 07.04.2019, 13.04.2019, 20.04.2019 ஆகிய நாட்களிலும் இவ்வாறான இலவச புலமைப்பரிசில் கருத்தரங்குகளை விடிவெள்ளி அமைப்பு மேற்கொண்டிருந்தது.

 

Tuition3

 

இதனை விட சிறுவர்களின் பாதுகாப்புக் கருதி வேலணை மத்திய கல்லூரி, வேலணை சைவப்பிரகாச வித்தியாலயம் ஆகியவற்றின் சுற்றுச்சுழல்களில் காணப்பட்ட பற்றைகளை அகற்றும் பணிகளைக் கடந்த 28.05.2019 அன்றும், அதற்கு முன் 05.05.2019 அன்று வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இலவச மின்னிணைப் பெற்றுக் கொடுக்கும் பணியையும் விடிவெள்ளி அமைப்பு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Shrubs