உதயங்கவுக்கு 17வரை மறியல்!

வெள்ளி பெப்ரவரி 14, 2020

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து, இன்று காலை கைதுசெய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான், சற்றுமுன்னர் உத்தரவிட்டார்.

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட உதயங்கவை, இன்று மாலை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.