உயிர்ச்சத்து-டி கூடுதலாகக் கிடைத்தால் வேகமாக குணம் அடைவதற்கு வாய்ப்பு !!

சனி மே 09, 2020

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.இந்த வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு பக்கம் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இன்னொருபுறம், கொரோனா எப்படிப்பட்டவர்களை தாக்குகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத முதியவர்கள் உயிரை கொரோனா வைரஸ் எளிதில் பறித்துக் கொள்கிறது,என்பது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்ட உண்மை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு 120 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களில் 5இல் ஒருவர் கொரோனாவினால் உயிரிழக்கிறார் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் வைத்தியசாலை பவுண்டேசன் ட்ரஸ்ட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எந்தக் குறைபாடு காரணமாக இறந்தார்கள் என்பதை ஒப்பீடு செய்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தினர்.

இதன் தொடக்க நிலை ஆய்வின் முடிவில் பெரும்பாலானவர்கள் உயிர்ச்சத்து-டி சத்து குறைபாட்டால் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இடைத் தொடர்ந்து உயிர்ச்சத்து-டி சத்து கிடைக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்ச்சத்து-டி கூடுதலாகக் கிடைத்தால் அவர்கள் வேகமாக குணம் அடைவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் இந்தச் சத்து குறைபாடு

காரணமாகத்தான் இவர்களை கொரோனா எளிதாக தாக்கி உள்ளது. இறந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிர்ச்சத்து-டி மிகவும் குறைவாக கொண்டிருந்தவர்கள்” என்றனர்.