வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி பூர்த்தி!

சனி நவம்பர் 02, 2019

எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலுக்கான  வாக்காளர்  அட்டைகள்  அச்சிடும் நடவடிக்கைகள்  அனைத்தும்  பூர்த்தி  அடைந்திருப்பதாக அரசாங்க  அச்சக  கூட்டுத்தாபன  தலைவர் கல்யாணி  லியனகே  தெரிவித்தார்.

உத்தேச  ஜனாதிபதி  தேர்தலுக்காக  இம்முறை ஒரு  கோடி  எழுபது  இலட்சம்  வாக்குச் சீட்டுக்கள்  அச்சிடப்பட்டு  தேசிய  தேர்தல்கள்  ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக  அவர்  மேலும்  தெரிவித்தார்.

இதேவேளை  இன்று  ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்கள்  அட்டையை  விநியோகிக்கும் விசேட  தினமாக  பிரகடகப்படுத்தப்பட்டிருப்பதாக   தபால்மா  அதிபர்  ரஞ்சித்  ஆரியரத்ன   தெரிவித்தார்.  

இன்று  விடுமுறை  தினமாக  இருந்த போதிலும் , விசேட  சேவைக்குத்  தபால்  ஊழியர்கள்  அமர்த்தப் பட்டிருக்கின்றார்கள் என்று  தெரிவித்த தபால்மா  அதிபர்  தபால்  ஊழியர்கள்  இன்று வாக்காளர்  அட்டைகளை  விநியோகிப்பதற்காக வீடுகளுக்கு  வருவதால்  நாய்களைக்  கட்டிப்போட்டு  வைக்குமாறு  அவர்  கேட்டுக்கொள்கின்றார்.