வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இரு ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது!

சனி நவம்பர் 02, 2019

புள்ளடியிட்ட வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இரண்டு ஆசிரியர்களையும் ஒரு கண்காணிப்பாளரையும் நேற்று காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர். 

தபால்மூல வாக்களிப்பு நிலையம்  ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு நிலையம் ஒன்றில் வைத்து காவல் துறை  அதிகாரிகளால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குச் சாவடிகளுக்குள் வாக்குச் சீட்டுகள் அல்லது புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளை புகைப்படங்கள் அல்லது காணொளி  எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இது தேர்தல் விதிமீறலாகும்.