வேளச்சேரி ஏரியை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்!

திங்கள் ஜூன் 10, 2019

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஏரியை புனரமைக்கும் பணி நடைபெற்றது.

வேளச்சேரி நூறு அடி சாலை- வேளச்சேரி பிரதான சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஏரி, குப்பைக்கழிவுகள் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஏரியை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியை சுற்றி உள்ள ஆகாய தாமரையை சுற்றி வலை அமைப்பது, ஜேசிபி உதவியுடன் குப்பைக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் ஏரிக்கரையை சுற்றி மரக்கன்றுகள் நட்டதுடன், பராமரிப்பு வேலியையும் அமைத்தனர். மேலும், நடமாடும் ரத்த தான முகாமும் நடத்தப்பட்டது.