வீதியோர உணவகங்கள் பரிசோதனை!!

ஞாயிறு மே 17, 2020

தற்போது முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் வீதியோர உணவகங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் நோன்பு காலத்தினை முன்னிட்டு வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி சுகாதார முறைப்படி வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வாழைச்சேனை பொலிஸாரால் சோதனைகள் நேற்று  (16) மாலை இடம்பெற்றது.

இதன்போது உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிட்டதோடு,உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் விற்பனை செய்யும் ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு சுகாதார முறைகள் தொடர்பில் விளிக்கமளிக்கப்பட்டது.