விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டோர் கைது!

ஞாயிறு நவம்பர் 03, 2019

கொழும்பு, தெஹிவளை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 100 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 17 பெண்கள் உள்ளடங்குவதாகவும், இதன்போது சுமார் 4 கிராம் கேரள காஞ்சாவை மீட்டுள்ளதாகவும் காவல் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மேற்கொள்ளப்படுவதாக காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய காவல் துறையினர்  மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.