வவுனியா பேருந்து நிலையத்தில் பெருமளவிலான மக்கள்!!

திங்கள் மே 18, 2020

வடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.எனினும் வேறு மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு நுழைவதற்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக் கிடையிலான போக்குவரத்து முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது.எனினும் இன்று (18.05.2020) முதல் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் தினமும் அரச,தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் அனுமதிப்பத்திரம்(பாஸ்) உள்ளோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்றையதினம் தொடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா பேருந்து நிலையத்தில் பெருமளவிலான மக்கள் அவர்களது சொந்த இடங்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காக வருகை தந்துள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

மேலும் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து தனியார், அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதுடன் வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கிடையிலும்,பாலமோட்டை,போகஸ்வெவ,வீரபுரம் ஊடாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் ஆகிய உள்ளூர் சேவைகளும் இடம்பெறுகின்றன.