வவுனியாவில் தெருவோரங்களில் இருந்தவர்களிற்கு புகலிடம்

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

வவுனியா நகரதெருவோரங்களில் தங்கியிருக்கும் அனாதரவற்றோர் வவுனியா குடியிருப்பு காலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வவுனியா பிரதேச செயலாளரின் அனுமதியோடு சமூக ஆர்வலர்களான விக்னா, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி, பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் பிரதீபன் ஆகியோர் இணைந்து குறித்த செயற்பாட்டை முன்னெடுத்ததுடன், நகரசபையின் பேருந்தில் அவர்கள் ஏற்றப்பட்டு குடியிருப்பு கலாச்சார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 8 பேர் குறித்த மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களிற்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.