யாழ். அராலியில் ஆசிரியை மீது தாக்குதல்

புதன் மே 15, 2019

யாழ்ப்பாணம் - அராலி வள்ளியம்மை வித்தியாசாலை ஆசிரியை ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று புதன்கிழமை (15) காலை 7 மணியளில் குறித்த ஆசிரியை பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த இருவர் பாடசாலை மாணவி ஒருவர் இடை வழியில் நிற்கின்றார், அவரை அழைத்துச் செல்லுமாறு கூறினர். 

ஆசிரியை குறித்த இடத்திற்குச் சென்றபோது அங்கு மாணவி இருக்கவில்லை. இரு நபர்களும் ஆசிரியை மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது. 

இதற்கான காரணம் தெரியவராத போதிலும், திருட்டு நோக்கமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. 

முதுகில் சிறு காயமடைந்த ஆசிரியை வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.