யாழ் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள சிலை உடைப்பு!

புதன் ஜூலை 24, 2019

யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள சிலை ஒன்று நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் உள்ள தேவாலயம் முன்பாக வைக்கப்பட்டுள்ள சிலையே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த சம்பவத்தை செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் பல தடவைகளில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, மற்றும் மன்னார் பகுதிகளில் கிறிஸ்தவ சிலைகள் உடைக்கப்பட்டதாகவும் இது குறிப்பிட்ட சிலரில் நாசகார வேலையாக இருக்குமெனவும் வடக்கிலுள்ள கிறிஸ்த்தவ மக்கள்  தெரிவித்துள்ளனர்.