யாழ் போதனா வைத்தியசாலையிலும் 5ஜி தொலைதொடர்பு கோபுரங்கள் அமைப்பு!

வியாழன் ஜூலை 11, 2019

யாழ்.குடாநாட்டில் சர்ச்சையை உண்டாக்கியிருக்கும் தொலைதொடர்பு கோபுரங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்த யாழ்.போதனா வைத்தியசாலை ஆவணப்படுத்தவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் மட்டுமன்றி மாவட்டம் முழுமையாக தற்போது குறித்த வகை கம்பங்கள் பொருத்தப்படுவதனால் இதன் மூலம் வைத்திய ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படும் அதே நேரம் சிறுவர்கள் மற்றும் கர்ப்பவதிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.

இந்த அச்சம் ஏற்படுவதாக பலரும் தொடர்பு கொண்ட நிலையிலேயே இதனை ஓர் ஆய்விற்கு உட்படுத்தும் நோக்கில் போதனா வைத்தியசாலையில் பல தரப்பட்ட வைத்திய நிபுணர்களும் உள்ளமையினால் இதனை ஓர் மக்கள் நன்மை கருதியவிடயமாக மேற்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.