யாழ் ஊடக அமையம் விழிப்புணர்வு நடவடிக்கை!

சனி நவம்பர் 02, 2019

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் பொருட்டு யாழ் ஊடக அமையம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இதறகமைய யாழிலுள்ள நினைவுது; தூபியில் அஞ்சலி செயலுத்தி இந்த விழிப்புணர்வுப் பயணத்தை ஆரம்பித்துள்ள ஊடக அமையம் வடக்கு முழுவதும் மக்களை சந்திக்கும் பயணத்திலும் ஈடுபடவுள்ளது.

அதன் முதல் கட்டமாக இன்று சனிக்கிழமை குடாநாடு முழுவதுமாக மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டும் துண்டுபிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை யாழ்.ஊடக அமையம் ஆரம்பித்துள்ளது.

y

யாழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுதூபியிலிருந்து புறப்படும் விழிப்புணர்வு பயணம் அனைத்து பிரதேசங்கள் வரையிலும் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக வவுனியா,மன்னார்,முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைப்புக்களுடன் இணைந்து விழிப்புணர்வு பயணிக்கவுள்ளதாக யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 2ஆம் திகதி, அனுஸ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் பொருட்டு, யாழ்.ஊடக அமையம் மீண்டும் ஊடகப்படுகொலைகளிற்கு நீதியை வலியுறுத்தியுள்ளது.