யாழில் துப்பாக்கி முனையில் பணம்,நகை கொள்ளை!

புதன் ஓகஸ்ட் 14, 2019

ஆலயத் திருப்­ப­ணிக்கென புலம்­பெ­யர் நாட்­டில் சேக­ரித்த நிதியை வழங்­க­வென வந்த குடும்­பத்தை ஆயு­த­ முனையில் அச்­சு­றுத்­திய இனந்­தெ­ரி­யா­தோர் பணம்,நகை என்­ப­ன­வற்­றைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம், எழு­து­மட்­டு­வாழ் ­ப­ளைப்பகு­தி­யிலுள்ள வீட்­டில் இடம்­பெற்­றுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் எழு­து­மட்­டு­வாழ் ­பளை மீனாட்சி அம்­பாள் கோவில்வரு­டாந்­தப் பெருந்­தி­ரு­விழா கடந்த ஆறாம் திகதிகொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­கி­றது.

இந்த நிலை­யில் புலம்­பெ­யர் நாடொன்றில் உள்ள ப­ளை­யைச் சேர்ந்த குடும்­பத்­தி­னர், கோவில் திருப்ப­ணிக்கு அங்­குள்­ள­வர்­க­ளி­டம் நிதியைச் சேக­ரித்து அதனை வழங்கவென சொந்த ஊருக்குவந்­துள்­ள­னர்.

சம்­பவ தினத்­தன்று கோவில் இர­வுத் திரு­விழா முடிந்­த­பின்­னர்புலம்­பெ­யர் நாட்­டில் இருந்து வந்த ஐந்து பெண்­க­ளும் வாய்­பேசமுடி­யாத ஆணும் வீட்­டுக்கு வந்து உண­வ­ருந்­திய பின்­னர்படுக்­கைக்­குச் சென்­றுள்­ள­னர்.

காணி­யின் பின்­வே­லியை வெட்டி உள்­நு­ழைந்த கொள்­ளை­யர்­கள் ஐந்து பேரில் முகத்தை மூடிக் கட்­டிய இரு­வர் வீட்­டுக்­குள் நுழைந்துஅங்­கி­ருந்த அனை­வ­ரை­யும் ஆயு­த­மு­னை­யில் அச்­சு­றுத்­தி­ய­து­டன் கோவில்

திருப்­ப­ணிக்கென கொண்டு வரப்­பட்ட 10 லட்­சம் ரூபாய் பணம், குறித்த ஐந்து பெண்­கள் அணிந்­தி­ருந்த 40 பவுண் தங்கநகை­கள் மற்­றும் வெளி ­நாட்டு நாண­யம் போன்­ற­வற்றை அப­க­ரித்­துச் சென்­றுள்­ள­னர் .

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக கொடி­கா­மம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்ததுடன் மோப்ப நாய்­க­ளின் உத­வி­யு­டன் தேடு­தல் நடத்தி வரு­கின்­ற­னர்