யாழ்.மாவட்டத்தில் 3 நாட்களில் ஒருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

யாழ்.மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒரு நோயாளி கூட அ டையாளம் காணப்படவில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.

கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தொற்றுக்குள்ளான ஒருவர் கூட அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. என அவர் கூறியுள்ளார்.

மேலும் இதுவரையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 67 பேருக்கும், தனிமைப்படுத்தப்படுத்தலில் உள்ள 79 பேருக்கும் மொத்தமாக 146 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

146 பேருக்கும் தொற்றில்லை என்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், தனிமைப்படுத்தலில் இருந்த 6 பேருக்கும் பரிசோதனைகள் மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக 7 கொரோனா நோயாளர்களே அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்